2 ஆம் வகுப்பு சிறுவனிடம் ஆசிரியை நடந்து கொண்ட செயல்! ராகுல் காந்தி ஆவேசம்
இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் 2 ஆம் வகுப்பு மாணவனை சக வகுப்பு மாணவர்களை விட்டு அடிக்க சொல்லும் வீடியோ பரவியதையடுத்து, ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரின் செயல்
உத்தரப் பிரதேச மாநிலம், முஸாபர்நகரில் த்ரபதி தியாகி என்ற பள்ளி ஆசிரியை ஒருவர் 2 ஆம் வகுப்பு மாணவனை வாய்ப்பாடு படிக்கும்படி கூறுகிறார். அதற்கு, அந்த மாணவன் சரியாக கூறவில்லை.
உடனே, அந்த ஆசிரியர் சக மாணவரை அழைத்து அந்த மாணவரின் கன்னத்தில் அறையும்படி கூறுகிறார். அப்போது, அந்த மாணவன் தன்னை கன்னத்தில் அறையும் போது அழ ஆரம்பிக்கிறார்.
இதற்கு அந்த ஆசிரியர், ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்லி, இந்த மதத்தில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால் தான் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
ராகுல் காந்தி ஆவேசம்
இந்த சர்ச்சையான வீடியோ தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது என்பது ஆசிரியர் செய்யக்கூடாத உச்சபட்ச இழி செயலாகும்.
இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர்.
குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம், அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் சேர்ந்து அன்பை கற்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
मासूम बच्चों के मन में भेदभाव का ज़हर घोलना, स्कूल जैसे पवित्र स्थान को नफ़रत का बाज़ार बनाना - एक शिक्षक देश के लिए इससे बुरा कुछ नहीं कर सकता।
— Rahul Gandhi (@RahulGandhi) August 25, 2023
ये भाजपा का फैलाया वही केरोसिन है जिसने भारत के कोने-कोने में आग लगा रखी है।
बच्चे भारत का भविष्य हैं - उनको नफ़रत नहीं, हम सबको मिल…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |