கணவனால் துன்புறுத்தப்பட்ட இந்தியப் பெண் எடுத்த மோசமான முடிவு... கனேடிய ஊடகவியலாளர் மீது நடவடிக்கை
*அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
*அது குறித்து விமர்சித்த கனேடிய ஊடகவியலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் 8 ஆண்டுகள் தன் கணவனால் துன்புறுத்தப்பட்டுவந்த ஒரு இந்தியப் பெண், வீடியோ ஒன்றில் தனக்கு நிகழ்ந்த துன்பங்களை விவரித்துவிட்டு இந்த மாதத் துவக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
நியூயார்க்கில் வாழ்ந்துவந்த Mandeep Kaur, Ranjodhbeer Singh Sandhu தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்று கூறி எட்டு ஆண்டுகளாக Mandeepஐ துன்புறுத்திவந்துள்ளார் Sandhu.
Image - cbc.ca
அவர் Mandeepஐ அடித்து, அவரது கழுத்தை நெறிக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. பின்னணியில் பிள்ளைகள் கதறும் சத்தமும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த மாத துவக்கத்தில் வீடியோ ஒன்றில் தன் கணவர் தன்னைத் துன்புறுத்துவதைக் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார் Mandeep.
இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கனேடிய வானொலி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் Paul Brar என்பவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
Sher E Punjab AM 600/Facebook
Sandhu சட்டப்படி குற்றம் சாட்டப்படாத நிலையில், அவர் மீது பழி சுமத்தக்கூடாது என்று கூறியிருந்தார் Paul Brar. குடும்ப வன்முறைக்கெதிரான சமூக ஆர்வலர்கள் அவரை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து Paul Brar பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்பாக அவர் சார்ந்த வானொலி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Paul Brar பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை சார் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவுகள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.