இளம்பெண்ணின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அத்துமீறிய பொலிசார் மீது நடவடிக்கை
கனடாவில், தற்கொலை எண்ணத்துடன் போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவருடைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் அத்துமீறிய பொலிசார் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண்ணின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொலிசார்
2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் மது அருந்தி சுயநினைவின்றிக் கிடந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கான்ஸ்டபிள் Connor McDonald என்னும் பொலிசார் ஒருவர் அவருடன் நேரம் செலவிட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கும் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவே, இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும்வரை காத்திருந்த Connor, அவரை தனது வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டின் அருகே கொண்டு விட்டிருக்கிறார். அத்துடன், தனது மொபைல் எண்ணையும் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துள்ளார் Connor. அன்று மாலையே சீருடை இல்லாமல் அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார் Connor.
(Submitted by RCMP)
மறுநாள் காலை, மீண்டும் அந்தப் பெண் வீட்டுக்கு Connor செல்ல, இருவரும் உடல் ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்காக Connorக்கு துறை ரீதியாக தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் நடந்து சுமார் ஓராண்டுக்குப் பின், ஒருநாள் அந்தப் பெண் தன் வீட்டில் இறந்துகிடந்திருக்கிறார்.
அத்துமீறிய பொலிசார் மீது நடவடிக்கை
அந்தப் பெண், நடந்ததைக் குறித்து தன் சகோதரி மற்றும் தனது இரண்டு தோழிகளிடமும் கூறியிருக்கிறார். Connor மீதான பச்சாதபத்தால், அவர் பாவம், நடந்த தவறுக்காக அவர் தண்டிக்கப்படுவதைப் பார்க்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.
(Evan Mitsui/CBC)
இந்த விடயம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்துவந்த நிலையில், Connor தனது பொலிஸ் வேலையைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் பாதகமான சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் தவறு என விசாரணை அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளார்கள்.
ஆகவே, உடனடியாக Connorஐ பதவிநீக்கம் செய்ய பொலிஸ் நன்னடத்தை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |