கையில் பணம் இல்லை! அம்மாவின் சொத்துக்களை விற்றுவிட்டேன்.. சர்வைவர் அர்ஜுனின் கண்ணீர் பதிவு
சர்வைவர் ஷோவில் தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை குறித்து ஆக்ஷன் கிங் வெளிப்படையாக கூறியது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஷோவின் ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் வெளியாவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி வெளியான ப்ரோமோவில் நடிகர் அர்ஜுன் அவரது ஆரம்பகால சினிமா குறித்து உணர்ச்சி பொங்கும் விதமாக பேசியிருந்தார்.
ஒரு காலத்தில் சினிமாவில் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும் சில காலங்களுக்கு பிறகு நான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. அதன் பிறகு சினிமா வாய்ப்புகளும் குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் யாரையும் நம்பாமல் அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிக்க தொடங்கினார். அப்போது பல பண நெருக்கடியை சந்தித்த அர்ஜுன், தங்களுக்கு சொந்தமாக பெங்களுரில் இருந்த வீட்டை விற்று அவரது தாய் பணம் அனுப்பி உதவியதாக அவர் கூறியுள்ளார்.
அவரது தாய் கொடுத்த தைரியத்தால் மட்டுமே நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் என்று உருக்கமாக கூறியிருந்தார்.