புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்ஸ் அரசின் நடவடிக்கை: உள்ளூர் மேயர்கள் கோபம்
ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, பாரீஸில் வாழும் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், உள்ளூர் மேயர்கள் கோபமடைந்துள்ளார்கள்.
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்ஸ் அரசின் நடவடிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பாரீஸில் வாழ்ந்துவந்த புலம்பெயர்ந்தோரை அரசு பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்துவருகிறது.
இந்நிலையில், புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்ஸ் அரசின் நடவடிக்கை: உள்ளூர் மேயர்கள் கோபம் என ஒரு செய்தி பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றில் வெளியானது.
அடடா, அந்த மேயர்களுக்கு புலம்பெயர்ந்தோர் மீது இவ்வளவு அக்கறையா என்று பார்த்தால், விடயம் வேறு மாதிரி போகிறது.
உள்ளூர் மேயர்கள் கோபம்
அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பாரீஸில் வாழ்ந்துவந்த புலம்பெயர்ந்தோரை அரசு பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்துவருகிறது.
அப்படி அந்த புலம்பெயர்ந்தோர், தங்கள் நகரத்தில் கொண்டு இறக்கிவிடப்பட்டதால் உள்ளூர் மேயர்கள் கோபமடைந்துள்ளார்களாம்.
அதாவது, அவர்களை எங்கள் நகரத்திற்கு ஏன் கொண்டுவந்தீர்கள் என மேயர்கள் கோபமடைந்துள்ளார்கள். Orleans நகர மேயரான Serge Grouard, ஏற்கனவே 100,000 மக்கள் வாழும் தனது நகரத்தில், முன்னறிவிப்பின்றி, திடீரென 500 வீடற்ற புலம்பெயர்ந்தோர் கொண்டு இறக்கிவிடப்பட்டதாக புகார் கூறுகிறார்.
மூன்று வாரங்களுக்கொருமுறை திடீரென ஒரு பேருந்து பாரீஸிலிருந்து வருகிறது, அதில் 35 முதல் 50 பேர் இருக்கிறார்கள் என்கிறார் அவர். அப்படி புதிதாக வருபவர்களை முன்று வராங்களுக்கு அரசின் செலவில் ஹொட்டல்களில் தங்கவைக்கவேண்டியுள்ளது என்கிறார் Serge Grouard. ஆனால், அவர்கள் தங்கள் சாப்பாட்டுக்கான செலவைத் தாங்களேதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.
Serge Grouardஐப் போலவே. பல நகர மேயர்களும், திடீரென முன்னறிவிப்பின்றி, புலம்பெயர்ந்தோர் தங்கள் நகரங்களில் கொண்டு இறக்கிவிடப்படுவதை விமர்சித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |