ரூ.43,000-யை குறைத்த SAMSUNG போனின் அதிரடி ஆஃபர்! என்ன மாடல் தெரியுமா?
சாம்சங் ஸ்மார்ட் போனின் விலையை 57 சதவீதத்தை குறைத்து மக்களுக்கு அதிரடி ஆஃபர் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. அதை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ரூ.74,999 இல்ல..ரூ.31,999 தான்
பிரபல இணையவழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்-ல் சில சமயம் பொருள்களின் விலையை குறைத்து ஆஃபர்களை அறிவிப்பது உண்டு.
அந்தவகையில், சாம்சங் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட் போனின் விலையை 57 சதவீதம் தள்ளுபடி செய்திருக்கிறது. அது தான் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) என்ற மாடலாகும்.
இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.74999 ஆகும். தற்போது இதன் மீது ரூ.35,000 நேரடி தள்ளுபடியும் கிடைக்கிறது. பின்பு அதன் அறிமுக விலையிலிருந்து பிளிப்கார்ட்டின் 57% தள்ளுபடி செய்து ரூ.31,999 க்கு வாங்கலாம். இதுவொரு பிளாட் ஆஃபர்.
இந்த ஸ்மார்ட் போனின் மீது நமக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகையும், குறிப்பிட்ட வங்கி சலுகையும் கிடைக்கிறது. அதாவது, இந்த பிரீமியம் ஸ்மார்ட் போனிற்காக எந்தவொரு எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி சலுகையும் நாம் பயன்படுத்த தேவையில்லை.
உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?
ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகையை பயன்படுத்தினால் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி போனின் விலையை குறைக்கலாம்.
அதாவது எக்ஸ்சேன்ஜ் சலுகையை பொறுத்தவரை பிளிப்கார்ட் நிறுவனமானது ரூ.36,600 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதற்கு நீங்கள் உங்களது பழைய ஸ்மார்ட் போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டும்.
உங்களது போன் என்ன மாடல் மற்றும் எப்படி வேலை செய்கிறது என்பதை பொறுத்தே எக்ஸ்சேன்ஜ் வேல்யூ இருக்கும்.
வங்கி சலுகையினை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி போனை நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10 சதவீத கேஷ்பேக் பெற முடியும். ஆக்சிஸ் பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் பெற முடியும்.
Samsung Galaxy S21 FE 5G அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி போனை பொறுத்தவரை 6.4 இன்ச் சூப்பர் அமோஎல்இடி (dynamic AMOLED 2X) டிஸ்பிளேவையும், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை (Snapdragon 888 Chipset) பேக்கையும் கொண்டுள்ளது.
டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஆன இந்த ஸ்மார்ட் போனில் 12MP + 12MP + 8MP கேமராக்கள் உள்ளது. மேலும், இதில் 32 எம்பி செல்பீ கேமரா (32MP Front Camera) உள்ளது. கடைசியாக பேட்டரி கெபாசிட்டி 4500 mAh ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |