தடைகளை மீறி ரஷ்யா பக்கம் சாயும் சுவிட்சர்லாந்து: சுவிஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கை
சுவிட்சர்லாந்து, உக்ரைன் போரைத்தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதையும் மீறி, ரஷ்யாவுக்கு ஆதரவாக ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளின் தாக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மீது பல நாடுகள் தடைகள் விதித்தன. அந்த நேரத்தில், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவைவிட்டு வெளியேறின.
தற்போது சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
இந்நிலையில், ரஷ்யா மீதான தடைகள் காரணமாக ரஷ்யாவைவிட்டு வெளியேறிய பெரிய சுவிஸ் நிறுவனங்கள், மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளன.
Credit Suisse ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு ஒன்று, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனங்களில் சுமார் 40 சதவிகித நிறுவனங்கள் ரஷ்யா மீதான தடைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, சுவிட்சர்லாந்தின் நடுநிலைமையைப் பராமரித்தல், அந்தந்த நிறுவனங்களின் விருப்பதைப் பொருத்தது என ஆய்வில் பங்கேற்ற முக்கால் பங்கு நிறுவனங்களும் கருதுகின்றன.