பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பில் பாரீஸிலுள்ள தூதரகம் செய்துள்ள செயல்...
பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகம் அலுவலக நேரத்தை நீட்டித்துள்ளது.
பொதுமக்கள் தூதரகத்துக்கு நேரில் வந்தோ அல்லது ஒன்லைனிலோ தங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம்.
பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகம், பொதுமக்கள் பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அதாவது, தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக அலுவலக நேரத்தை நீட்டித்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை, அதாவது செப்டம்பர் 16ஆம் திகதிவரை, பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகம், காலை மணி 9.30 முதல், மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும்.
அதே நேரத்தில், ஒன்லைன் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம்.
Image - Facebook