லண்டனில் தலையில் குண்டடிபட்டு உயிருக்கு போராடும் BLM பெண் ஆர்வலர்
Black Lives Matter ஆர்வலர் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பிள்ளைகளின் தாயாரான சாஷா ஜான்சன் என்பவரே, துப்பாக்கியால் சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
கருப்பின மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார் சாஷா ஜான்சன். மேலும் தற்போது Black Lives Matter அமைப்பில் இணைந்து செயல்பட தொடங்கிய பின்னர் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள பெருநகர காவல்துறை, தாக்குதல்தாரி தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும்,
ஆனால் சாஷாவுக்கு கொலை மிரட்டல் இருந்துள்ளது சமூக ஊடகங்கள் மூலம் தங்களுக்கு தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.