கையில் இந்திய கொடியுடன் வாகா பார்டரில் நின்ற நடிகர் அஜித்! வைரலாகும் புகைப்படம்
பிரபல திரைப்பட நடிகரான அஜித்குமார் கையில் கொடியுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், நடிப்பையும் தாண்டி ஒரு பைக் ரேசர், கார் ரேசர் ஆவார். படங்களில் நடிப்பதை தவிர்த்து, அவர் துப்பாக்கிச் சூடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது வலிமை படத்திற்கான அனைத்து ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதால், நடிகர் அஜித் தற்போது இரு சக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், தற்போது அவர் வாகா பார்டரில் இந்திய கொடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.