மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் அஜித் குமார்
சென்னையில் கார் பந்தய போட்டியை நடத்திய தமிழக அரசிற்கு நடிகர் அஜித்குமார் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் பாராட்டு
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டு, ஒரு பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.
பின்னர் அவர் அங்குள்ள மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு நேர்காணலில் , "என்னுடைய கார் பந்தயத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள், அரசு என அனைவருக்கும் நன்றி.
தமிழக அரசு கார் பந்தயத்தை நடத்துவதற்கு சிறப்பான முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக விளையாட்டுத்துறை கார் பந்தயத்தை ஊக்குவிக்கிறது.
அதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அரசின் இந்த முயற்சி இந்தியாவில் கார் பந்தய வளர்ச்சிக்கும், ஆர்வத்தை உருவாக்குவதற்கும் பங்காற்றுகிறது" என்றார்.
அதேபோல, சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் சாதனை படைத்த கார்த்திக் நரேன், கருண் உள்ளிட்ட வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |