மதம் மற்றவர்களை வெறுக்க வைக்கும்.. நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? அஜித்தின் பேட்டி
நடிகர் அஜித் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றி பெற்ற நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்பு நேர்காணல் ஒன்றில் பல விடயங்களைப் பேசியுள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தல என்று அழைக்கப்படும் அஜித், நடிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும், குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுப்பதுடன், தனக்கு பிடித்த காரியத்திலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேசில் 991 பிரிவில் 3வது பரிசை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
அஜித்தின் பேட்டி
பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகின்றது.
அவர் அளித்த பேட்டியில், கார் ரேஸ் என்பது தனக்கு மிகவும் பிடிக்கும். கார் ரேஸ் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளும் பிடிக்கும். குறிப்பாக பயணம் மேற்கொள்வது என்பது அதிகமாக பிடித்த விடயமாகும்.
இவை தன்னை புத்துணர்வாக்கி, அடுத்த வேலைகளுக்கு சுறுசுறுப்பாக உத்வேகப்படுத்துவதாகவும் இருக்கின்றது.
எனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தது என்னவெனில், பள்ளிக் சென்று கல்வியும், பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட வாழ்க்கைக்கு பணம் தான் மிகவும் முக்கியமானது.
பயணம் மேற்கொள்ளும் போது தான் வெவ்வேறான மனிதர்களை சந்திப்பதுடன், வெவ்வேறான கலாச்சாரம் குறித்தும் தெரியவரும் என்றும், “மதம் என்பது நீங்கள் முன் பின் தெரியாத மக்களை வெறுக்க வைக்கும். இது உண்மையை பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்” என்ற பழமொழியையும் கூறியுள்ளாராம்.
மேலும் உங்களது உண்மையான குணம் உங்களுக்கு தெரிவதுடன், பயணிக்கும் போது நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது, இந்த உலகம் எவ்வளவு சிறியது என்பது தெரியும்.
உங்களுக்கு ஏற்படும் வெற்றி தோல்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விளையாட்டு கற்றுக் கொடுக்கும். இதனால் தான் உலகத் தலைவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினார்கள். ஆகையால் வாழ்க்கையில் விளையாட்டும் பயணமும் மிக மிக முக்கியமான ஒன்றாகும்’ என்று பேசியுள்ளார்.
தயவு செய்து இதை பரப்பாதீர்கள்
தற்போது சமூகவலைத்தளங்கள் மிகவும் அபாயகரமானதாக மாறிவருகின்றது. வாழ்க்கை மிகவும் சிறியதாக இருக்கும் நிலையில், நாம் ஏன் இவ்வளவு ஆபத்தானவர்களாகவும், கொடிய சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
சமூகவலைத்தளங்களில் காணப்படும் வெறுப்பு பேச்சானது, பிரபலங்கள் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களையும் பாதிக்கின்றது.
ஆகையால் தயவு செய்து பொய்யான கருத்துக்களையும், வெறுப்பான கருத்துக்களையும் பரபரப்பாதீர்கள். இவை விரைவில் முடிவிற்கு வர வேண்டும் என்று பிரார்த்திப்பதாக கூறினார்.
ரசிகர்களுக்கு கூறியது என்ன?
மற்றவர்கள் உங்களை என்ன கூறுகின்றனர் என்பதைக் கேட்க நீங்கள் காத்திருக்காமலும், நேரத்தை செலவிடாமலும், உங்களது முழு கவனத்தையும் உங்களது வாழ்க்கையைப் பற்றியதாக வைக்கவும்.
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? நம் எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். நாம் நிகழ்காலத்தில் வாழ விரும்பினால் அடுத்தவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |