பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் - குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்தியா அரசு சார்பில், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 25 ஜனவரி 2025 அன்று, பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
இதில், பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது.
பத்மபூஷன் அஜித் குமார்
இன்றைய விழாவில், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்ட விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டவர்களுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
King has been Crowned👑👑👑👑👑👑👑❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #PadmabhushanAjithKumar 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/czJslPNwHp
— Adhik Ravichandran (@Adhikravi) April 28, 2025
நடிகர் அஜித்குமார் விருது பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்குநர் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |