பாலியல் தொழில் வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது!
பிரபல நடிகர் மஞ்சுநாத் பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து மோசடியில் ஈடுபட்ட மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஷ், மோகன், மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
sakshi english
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க...
கைதானவர்களில் மஞ்சுநாத் என்ற சஞ்சு கன்னட படங்களில் நடித்து இருப்பதும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த பாலியல் தொழில் மோசடியின் மூளையாக மஞ்சுநாத் செயல்பட்டிருக்கிறார் என பொலிசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.