இறுதிச்சடங்கு முடியும் வரை இருந்தார்! நடிகர் அருண்விஜய்க்கு உருக்கமுடன் நன்றி சொன்ன பிரபலம்: வெளியிட்ட புகைப்படம்
நடிகரான அருண் விஜய் ஒளிப்பதிவாளர் தந்தை மரணத்தின் இறுதிச்சடங்கு முடியும் வரை அங்கிருந்து சென்ற அவரின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல திரைப்பட நடிகராஜ அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில், பார்டர் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார் இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை பாலசுப்ரமணியம் கடந்த 18-ஆம் திகதி காலமானார்.
இந்த செய்தியைக் கேட்டு உடனடியாக அங்கு விரைந்த நடிகர் அருண்விஜய் கடைசி வரை இருந்து சென்றார்.
Thanking u Tons of Tons sir ? Ur presence of my father last funeral rites till End ???begin human love loads ?@arunvijayno1 pic.twitter.com/7oUl3MNNWQ
— RajasekarDOP (@DopRajasekarB) September 19, 2021
இது குறித்து ராஜசேகர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அருண் விஜய் சார்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், உடனே வந்த அவர் இறுதிச்சடங்கு முடியும் வரை இருந்து சென்றார் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்ட அருண் விஜய் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.