பிறந்ததும் தத்து கொடுக்கப்பட்ட பிரபல நடிகர்... தந்தை வெளியிட்ட பல உண்மைகள்

Manchu
in பொழுதுபோக்குReport this article
நடிகர் அரவிந்த்சாமி அவரது தந்தை நடிகர் டெல்லி குமார் தனது மகன் என்றும் அவரை தத்து கொடுத்தது குறித்தும் பேசியுள்ளார்.
நடிகர் அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 1990களில் வலம்வந்த நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினார்.
பின்பு தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர்,தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.
தற்போது அரவிந்த் சாமி தத்து கொடுக்கப்பட்ட குழந்தை என்ற உண்மையாகி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆம் அரவிந்த் சாமியின் தந்தையான நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் பல உண்மையை கூறியுள்ளார்.
அதாவது அரவிந்த் சாமி பிறந்தவுடன், அவரை தனது தங்கைக்கு தத்து கொடுத்துள்ளதாகவும், ஏனெனில் தனது தங்கைக்கு குழந்தை இல்லை என்பதால் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுவரை இந்த விடயம் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது டெல்லி குமார் இதனை கூறியுள்ளார். மேலும் அரவிந்த் சாமி, தங்களிடம் அவ்வளவாக பேசிக் கொள்ள மாட்டார் என்றும் தனது தங்கை குடும்பத்தினரிடம் தான் பாசமாக இருப்பார் என்று உண்மையை உடைத்துள்ளார்.