சினிமா கைவிட்டாலும் 3300 கோடிக்கு பிசினஸ் நடத்தும் பிரபல தமிழ் நடிகர்: யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மணிரத்னம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த் சாமி.
இவர் கடந்த 1991ஆம் ஆண்டு மணிரத்னம் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான தளபதி படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து மணிரத்னம் ரோஜா படத்தில் ஹீரோவாக வைத்து இயக்கினார். மேலும், மீண்டும் பாம்பே படத்தில் அரவிந்த் சாமி நடித்தார்.
இப்படி தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வந்த அரவிந்த் சாமி கடந்த 2005ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால் செயலிழந்தது.
இதனால் 2 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த அரவிந்த் சாமி, அதில் இருந்து படிப்படியாக மீண்டும் வந்தார்.
ஆனால் சினிமாவில் மார்க்கெட் இழந்ததால், பிசினஸில் கவனம் செலுத்திய அவர், டேலண்ட் மேக்ஸிமஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.3300 கோடி ஆகும்.
விபத்தின் இருந்து மீண்டுவந்த அரவிந்த்சாமி, மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பின் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார்.
சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன் திறமையை நிரூபித்து உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |