நடிகர் ஆர்யா மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா தன் மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பதை முதல் முறையாக வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில், நடிகர் ஆர்யா உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெடி, சர்பட்டா படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அரண்மனை 3 படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இவர் மனைவி ஆயிஷா கர்ப்பமாகி, கடந்த ஜுலை 24-ஆம் திகதி பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதை நடிகர் விஷால் தான் உறுதி செய்தார்.
அதுவரை ஆர்யாவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது குழந்தை பிறந்து 2 மாதங்கள் கடந்த நிலையில், ஆர்யா தன்னுடைய இன்ஸ்டார்கிராம் ஸ்டோரியில், தன்னுடைய செல்பி புகைப்படத்தை பதிவிட்டு, அதன் மேலே குழந்தை ஒன்றின் பொம்மையை குறிப்பிட்டு அரியானா(Ariyana) என்று தெரிவித்துள்ளார்.
இது தான் அவருடைய குழந்தையின் பெயராம், இது குறித்து அவருடைய மாமியார், அதாவது ஆயிஷாவின் தாயார் ஷாஹீன் கூறுகையில், என் பேத்தி பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. அவருக்கு அரியானா(Ariyana) என்று பெயர் வைத்துள்ளோம்.
குழந்தையின் பெயரில் தந்தை ஆர்யாவின் பெயரும் இருப்பதால் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. விரைவில் குழந்தையின் புகைப்படங்களை வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.