இரண்டாவது திருமணம் குறித்தான எண்ணம் இருப்பது உண்மையே! ஆனால்... நடிகர் பப்லு திடீர் விளக்கம்
இளம்பெண்ணை நடிகர் பப்லு மணந்ததாக வெளிவந்த செய்தி குறித்து அவரின் விளக்கம்.
இரண்டாவதுத் திருமணம் குறித்த எண்ணம் இருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் நடக்கவில்லை கூறிய தகவல்.
இளம்பெண்ணை திருமணம் செய்ததாக வந்த தகவல்கள் குறித்து நடிகர் பப்லு பிரித்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகர் பப்லு தன்னுடைய 56 வது வயதில் 23 வயதுப் பெண்ணை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மலேசியாவை சேர்ந்த பெண்ணை அவர் மணந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ள பிரித்விராஜ், 2வது திருமணம் செய்துகொண்டதாக பலர் போன் போட்டு கேட்கிறார்கள். எனக்கு இரண்டாவதுத் திருமணம் குறித்தான எண்ணம் இருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் எனக்கு நடக்கவில்லை. எனவே, நான் எப்போது இதுப் பற்றி அதிகாரப்பூர்வமாக சொல்கிறேனோ அப்போது செய்தி வெளியிடுங்கள்.
சினிமா நட்சத்திரங்கள் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதில் யாரும் தலையிட வேண்டாம். நான் எதாவது செய்தால் அதை வெளிப்படையாக செய்பவன்.
உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன் தான் பண்ணுவேன். திருட்டுத்தனமாக எதுவும் செய்வதில்லை. இந்த செய்தி குறித்து என்னிடம் உண்மையா பொய்யா எனக் கேட்டவர்களுக்கு இந்தச் செய்தி நிச்சயம் விளக்கத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.