முதல் மனைவியுடன் விவாகரத்து! 9 வயதில் மகள்... இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்
பிரபல திரைப்பட நடிகர் பாலா, எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, வீரம், தம்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் பாலா (38).
இவர் பிரபல திரைப்பட இயக்குனர் சிவாவின் சகோதரர் ஆவார். பாலாவுக்கு அம்ருதா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாலாவுக்கும் - அம்ருதாவுக்கும் கடந்த 2019-ம் விவாகரத்து ஆனது.
இதையடுத்து தற்போது எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் பாலா.
புதுமணத்தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.