பிரபல நடிகர் பாலா சரவணன் வீட்டில் நடந்த சோகம்! தயவு செய்து எச்சரிக்கையா இருங்க என உருக்கம்
பிரபல திரைப்பட நடிகரான பாலா சரவணனின் தங்கை கணவர் கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டதாக, அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இந்த கொரோனா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது.
அந்த வகையில், காமெடி நடிகரான பாலா சரவணன் சற்று முன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...
— Bala saravanan actor (@Bala_actor) May 6, 2021
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss??????????????
பாலா சரவணன் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமாகி, அதன் பின் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் ஒருநாள் கூத்து, திருடன் பொலிஸ், ராஜா மந்திரி, டார்லிங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.