சமந்தா டூ ரஜினிகாந்த் வரை.. இந்த நோயால் பாதிக்கப்பட்டது தெரியுமா?
சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்கள் தங்களது பிஸியான கால அட்டவணைகளால் சரியான தூக்கம், உணவு போன்றவையின்றி உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தீபிகா படுகோனே முதல் சமந்தா வரை அதுபோல சல்மான் கான் முதல் ரஜினிகாந்த் வரை பல நடிகர்கள் பல ஆண்டுகளாக உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் சில நடிகர்கள் பல ஆண்டுகளாக சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பார்ப்போம்..
சிறுவயதில் இருந்தே நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அவருக்கு spinal stenosis இருப்பது கண்டறியப்பட்டது. இது முதுகு தண்டு வளைந்திருக்கும் ஒரு தீவிரமான சுகாதார நிலை ஆகும். இறுதியில் அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமந்தா ரூத் பிரபு 2012 ஆம் ஆண்டில் Polymorphous Light Eruption எனப்படும் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, சூரிய ஒளி பட்டாலே அலர்ஜி ஏற்படும் அபாயம் உள்ளது, அவர்களது சருமம் சூரிய ஒளிக்கு sensitiveஆக இருக்கும்.
2011ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மூச்சுக்குழாய் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
பாலிவுட் திரையுலகின் பாய்ஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கான் Trigeminal Neuralgia நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் முகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா மன அழுத்தத்துடன் தனது போராட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வலுவாக இருந்தார். இதையடுத்து அவர் Live Love Laugh என்ற அமைப்பை தொடங்கி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.