தமிழில் நடிகர் சூர்யாவுடன் நடித்துள்ள பிரபல திரைப்பட நடிகர் காலமானார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் தனது 52வது வயதில் காலமானார்.
ஒரு சமயம் ராணுவத்தில் பணிபுரிந்த பிக்ரம்ஜித் பின்னர் திரையுலகில் கடந்த 2003ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அங்கு பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள இடையே புகழ்பெற்றார். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில், நடிகை சமந்தாவுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்ரம்ஜித் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்துள்ளது.
பிக்ரம்ஜித்தின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.