இலங்கை தமிழனான எனக்கு விவேக் தான் ஆதரவு கொடுத்தாரு! என்னால தாங்க முடியல.. கலங்கிய நடிகர் போண்டா மணி
நடிகர் விவேக் மறைவுக்கு இலங்கை தமிழரான நடிகர் போண்டா மணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் போண்டா மணி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், நடிகர் விவேக் சார் பற்றி நிறைய சொல்லலாம், நல்ல மனிதரான அவர் நிறைய பேருக்கு உதவியிருக்கிறார்.
எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். நான் ஒரு இலங்கை தமிழன், நான் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் எனக்கு ஆதரவு கொடுத்து உணவு கொடுத்தார்.
என்னுடைய இன்றைய நிலைக்கு அவர் தான் காரணம். அவரை இப்படி பார்த்தால் தாங்க முடியவில்லை, நல்ல மனிதன் நம்மை விட்டு போய்ட்டாரு என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.