சொந்தமாக போர் விமானம், 13 ஆடம்பர கார்கள் : Fight Club ஹீரோ பிராட் பிட்டின் சொத்து மதிப்பு
தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிராட் பிட்டின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
பிராட் பிட்
அமெரிக்காவின் Oklahomaவில் 1963ஆம் ஆண்டு பிறந்தவர் பிராட் பிட் (Brad Pitt).
1987யில் திரைத்துறையில் நுழைந்த பிராட், Hunk என்ற திரைப்படத்தில் முதல் முறையாக தோன்றினார். அதனைத் தொடர்ந்து The Dark Side of the Sun படத்தில் ஹீரோவாக நடித்த அவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து பிஸியான நடிகராக மாறினார்.
1995யில் மோர்கன் பிரீமேனுடன் பிராட் பிட் இணைந்து நடித்த Seven திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.
பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த பிராட் பிட் 'Fight Club', 'Spy Game', 'Ocean's Eleven' மற்றும் 'Mr and Mrs. Smith' படங்களில் மிரட்டினார்.
பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டனை 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்த பிராட் பிட், 2005யில் விவாகரத்து செய்தார்.
அதன் பின்னர் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் காதலில் விழுந்த பிராட் 2014ஆம் ஆண்டில் அவரை மணந்தனர். ஆனால் "பிராஞ்சலினா" என புகழ்பெற்ற இந்த ஜோடி 2019யில் பிரிந்தது.
தற்போது வரை நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிராட் பிட் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். அகாடமி, பாஃப்தா, கோல்டன் குளோப் உள்ளிட்ட 53 விருதுகளை பிராட் பிட் பெற்றுள்ளார்.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு 20 மில்லியன் டொலர்கள் வரை பிராட் பிட் ஊதியம் பெறுகிறார். 2024ஆம் ஆண்டின் கணக்கின்படி பிராட் பிட்டின் நிகர சொத்து மதிப்பு 400 மில்லியன் டொலர்கள் ஆகும்.
அவரது முதன்மையான வருமானம் நடிப்பில் மூலம் வந்தாலும், அவர் தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிராண்ட் ஒப்புதல்கள் வாயிலாகவும் சம்பாதிக்கிறார்.
பிராட் பிட்டின் பெயரில் ஆடம்பர மாளிகைகள், வில்லாக்கள் உள்ளன. குறிப்பாக, 1918யில் கட்டப்பட்ட DL james house என்ற ஆடம்பர வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டொலருக்கு பிராட் பிட் வாங்கினார்.
ஆடம்பர கார்களை விரும்பும் பிராட் பிட் Audi Q7, ஆஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி, மெர்சிடெஸ், BMW, Chevrolet Camaro, டெஸ்லா உள்ளிட்ட பிராண்ட்களின் கார்களை வைத்துள்ளார். மேலும் Supermarine Spitfire Aircraft என்ற விமானத்தை பிராட் பிட் சொந்தமாக வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |