ஓர் மரணம் என்ன செய்யும்! விவேக்கின் நிழலாக இருந்த நடிகர் செல்முருகனின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்.. கலங்கடிக்கும் ஒற்றை புகைப்படம்
நடிகர் விவேக்கின் நிழலாக வலம் வந்த அவரின் நெருங்கிய நண்பர் செல்முருகன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு படிப்போர் மனதை கலங்கடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
அவரின் மரண செய்தியால் தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் விவேக்கின் மேலாளரும், அவரின் நிழலாக இருந்த நெருங்கிய நண்பருமான செல்முருகன் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கறுப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள்.
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள். ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே.
இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன்.
இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதோடு விவேக் இறந்த தினத்தில் செய்வதறியாது திகைத்து நிற்கும் செல்முருகனின் ஒரு புகைப்படம் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல pic.twitter.com/rvnXRLXxsw
— cellmurugan@gmail.co (@cellmurugan) April 18, 2021