பேரழிவை சந்தித்த வயநாட்டிற்கு ராம்சரணும், நானும் இணைந்து ஒரு கோடியை வழங்குகிறோம் - தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி
கேரளாவின் வயநாடு பகுதியில் பாதிக்கட்டவர்களுக்காக நடிகர் சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கை 359
பேரழிவுக்கு ஆளான வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பலியானவர்களில் 148 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த 81 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிரஞ்சீவி நிவாரண உதவி
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''கடந்த சில நாட்களாக கேரளாவில் இயற்கை சீற்றம் காரணமாக, நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பேரழிவு மற்றும் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வயநாடு சோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் இதயம் செல்கிறது.
சரண் மற்றும் நானும் இணைந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறோம். வலியில் வாடும் அனைவரும் குணமடைய எனது பிரார்த்தனைகள்!'' என தெரிவித்துள்ளார்.
Deeply distressed by the devastation and loss of hundreds of precious lives in Kerala due to nature’s fury in the last few days.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 4, 2024
My heart goes out to the victims of the Wayanad tragedy. Charan and I together are contributing Rs 1 Crore to the Kerala CM Relief Fund as a token of…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |