டேனியல் பாலாஜியின் கடைசி 2 மணி நேரம்! இரவு மருத்துவமனையில் நடந்தது என்ன?
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி 2 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் விளக்கியுள்ளார்.
டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த நிலையில் மார்ச் 29ம் திகதி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டேனியல் பாலாஜி கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டேனியல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2002யில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார்.
இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு
இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கல்யாண சுந்தரம், கலாட்டா என்ற தனியார் Youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் டேனியில் பாலாஜியின் கடைசி 2 மணி நேரங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், மதியம் முதல் டேனியல் பாலாஜிக்கு நெஞ்சு வலி இருந்துள்ளது. வலி அதிகரித்ததால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார்.
அவரது இதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது எனவே மருத்துவமனையில் டேனியல் பாலாஜிக்கு CPR மற்றும் இதயத்திற்கு ஷாக் கொடுப்பது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் அவரது இதய செயல்பாட்டை மேம்படுத்த பல முயற்சிகள் செய்தோம், இருப்பினும் பாலாஜியின் உடல் நிலை மோசமடைந்ததால், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |