கன்னட நடிகர் தர்ஷனின் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு
கன்னட ஹீரோ தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் இன்று (செவ்வாய்க்கிழமை) தன் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
ரேணுகா சுவாமி என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.
தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா குறித்து கருத்து தெரிவித்ததால் ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, அவரது மேலாளர் இறந்தது விவாதப் பொருளாகியுள்ளது.
பெங்களூரில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து குறிப்புடன் வீடியோ செய்தியும் மீட்கப்பட்டது.
கடிதத்துடன் வீடியோவில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று கூறியுள்ளார். தனிமை காரணமாக இறக்க முடிவு செய்ததாக கூறினார்.
ஏற்கனவே ரேணுகா சுவாமி கொலை வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் மேலாளர் இவ்வாறான முடிவை எடுத்தது கன்னட திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |