ஆசை ஆசையாக புடவையில் காதலை வெளிப்படுத்திய தேவயானி! சுவாரசிய கதை
தனது காதலனை கரம்பிடிக்க வீட்டை விட்டு நடிகை தேவயானி வந்த கதை அனைவருக்கும் தெரியும்.
நடிகை தேவயானி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 90களில் இருந்தவர் நடிகை தேவயானி.
நடிகர் அஜித் மற்றும் விஜய் என பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். ’கோலங்கள்’ உட்பட பல சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது யாரும் அறிந்ததே.
இந்த நிலையில் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தை செய்துக்கொள்ள நடிகை தேவயானி துணிந்து பல முடிவுகளை எடுத்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி தனது காதலனை கைப்பிடித்துள்ளார்.
காதல் கதை
சூரியவம்சம் திரைப்படத்தில் நடிக்கும் போது உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
அம்மாவை விட ஒருத்தர் அன்பு காட்டுகின்றார் என எண்ணி உருகி உருகி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தாராம்.
ஆனால் இருவரும் தங்களது காதலை வெளியே தெரிவித்து இல்லையாம்.
ராஜகுமாரன் தேவயானிக்கு ஒரு புடவையை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த புடவையை பத்திரமாக வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் அந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து ராஜகுமாரனிடம் இது என்ன புடவை என்று தெரியுதா? என்று கேட்டுள்ளார்.
அப்போது தான் தேவயானி தன்னை காதலிப்பதை அவர் உணர்ந்துள்ளார்.
பிறகு ஒரு சில காலங்களில் இவர்களின் காதல் விவகாரம் தேவயானி வீட்டிற்கு தெரியவர, தேவயானி அம்மா தேவயானியை வீட்டிலேயே சிறை வைத்துள்ளாராம்.
அந்த வீட்டின் சுவர் ஏறி குதித்து ராஜகுமாரனை திருமணம் செய்து இருக்கிறார்.
திருமணத்தின் பின்னர் இவரின் நடிப்புக்கான வாய்ப்பு குறைய தொடங்கியதால், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார்.
மேலும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமண வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |