நெஞ்சில் குடியிருக்கும் தலைவா.., விஜய் முகத்தை பச்சை குத்திக்கொண்ட நடிகர் தாடி பாலாஜி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்.
அதேநேரத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ரூபாய் 275 கோடிகள் சம்பளமாகப் பெறுகிறார்.
அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய் அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், பல நடிகர்கள் விஜய்யின் அரசியல் கட்சியில் தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் முக்கியமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவர், விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 10 படங்களில் விஜய்யின் நண்பராக நடித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தாடி பாலாஜி, கட்சிப் பணிகள் மேற்கொள்வதை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றார்.
இந்நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் முகத்தினை தனது நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
மேலும் விஜய்யின் முகத்திற்கு கீழ், நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகத்தையும் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
இவரது இந்த செயல் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மத்தியில் நல்ல கவனத்தினை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |