நடிகர் தனுஷ் பதிவிட்ட புகைப்படம்! நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் என உருக்கம்
பிரபல திரைப்பட நடிகரான தனுஷ் தன்னுடைய தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி கோலிவுட்டிலும் கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது தெய்வமான அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களின் அளவில்லா அன்பாலும், பிரார்த்தனையாலும் நான் இதுவரை வந்துள்ளேன். எனது தெய்வம் நீண்ட காலம் வாழ வேண்டும்.
குடும்பத்திற்காக நீங்கள் சகித்துக்கொண்டதற்கு ஈடாக, எங்களால் எதுவும் செய்ய இயலாது. நான் என்னை ஒரு நல்ல மகனாக மாற்றிக்கொள்ளவும், உங்களை பெருமைபடுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருடைய அம்மாவிற்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.