அரசியல் வருகை உறுதியா? ரசிகர்களிடம் தனுஷ் வைத்த கோரிக்கை
சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது ரசிகர்களிடம், சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களில் அதிகம் ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த உரை, அவர் அரசியலுக்கு வருவாரா என்ற புதிய ஊகங்களை தூண்டியுள்ளது.
தனுஷ், “இவ்வளவு மக்கள் ஒன்று கூடுவது மிகப்பெரிய சக்தி. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் தேவை. உங்கள் பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை புரிந்து, அவர்களுக்கு உதவுங்கள். நான் உங்களைப் பற்றி இன்னும் பெருமைப்பட விரும்புகிறேன்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த நிகழ்வில், ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் வெளியிட்டார். இதனால், விஜய் அரசியலுக்குள் வந்த பாதையைப் போல தனுஷும் அதே வழியில் செல்லக்கூடும் என்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நல அமைப்புகளாக மாற்றி, பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தமிழக முதல்வராக உயர்ந்தார்.
இதேபோல், தனுஷ் ரசிகர்களிடம் நலத்திட்டங்களில் ஈடுபடுமாறு கூறியிருப்பது, அவரும் அரசியலுக்குள் வருவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#Dhanush gives a Strong hint about his Political Entry:
— Laxmi Kanth (@iammoviebuff007) July 26, 2026
"So many people have gathered in one place.. This kind of unity has a power..💪 You need to give that unity a purpose.. Not just through audio launches and meet ups. Join hands and do more welfare work.. Do whatever you can…
சமூக ஊடகங்களில் பலர், “விஜய் அரசியலுக்கு வந்தால், தனுஷ் ஏன் வரக்கூடாது?” என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “தமிழகத்திற்கு கல்வியறிவு, ஒழுக்கம், துணிச்சல் கொண்ட குரல்கள் தேவை” என தனுஷை வரவேற்றுள்ளனர்.
இருப்பினும், தனுஷ் இதுவரை அரசியலில் நேரடியாக ஈடுபடுவதாக உறுதிப்படுத்தவில்லை. அவர், தனது ரசிகர் மன்றங்களை இரத்த தானம், வெள்ள நிவாரணம், கல்வி உதவி போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |