விஜய்க்கு திரிஷா போல், எனக்கு இந்த நடிகை - வைரலான நடிகரின் பேச்சு
விஜய் த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் பேசியது வைரலாகி வருகிறது.
விஜய் - த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி, போட்டியிட்ட முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சராகியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து, திருமண விழாவிற்கு விஜய் உடன் த்ரிஷா ஒரே நிற உடையில் ஒன்றாக வருகை தந்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவிலும் த்ரிஷா கலந்து கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் விஜய் த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தியான் ஸ்ரீனிவாசன்
நிகழ்வு ஒன்றின் மேடையில் பேசிய அவர், " நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது, நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போது, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நானும் முதலமைச்சராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்தச் வேளையில், அஜு வர்கீஸ் என்னை அழைத்து, முதலில் முதலமைச்சராக முயற்சிக்காதீர்கள்; அம்மா (AMMA) சங்கத்தின் தலைவராவதன் மூலம் முதல் அடியை எடுத்து வையுங்கள் என்று கூறினார். சமூக சேவைகள் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிறகு, முதலமைச்சராகலாம் என்று ஆலோசனை கூறினார்.
நான் நவ்யா நாயர் மீதான காதலை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தினேன். தற்போது அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது படத்தில் நாங்கள் இணைத்துள்ளோம்.
Mollywood is joking about CM Vijay and Trisha affair 🤦♂️ pic.twitter.com/VDTZWgrWxd
— Deepu (@deepu_drops) July 15, 2026
நான் முதல்வராகப் பதவியேற்கும்போது நவ்யா முதல் வரிசையில் சேலை அணிந்து அமர வேண்டும் என விரும்புகிறேன். ஆனந்தக் கண்ணீருடன் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறேன்" என பேசினார்.
நவ்யா நாயர் சொன்ன பதில்
கீழே அமர்ந்து இதனை கேட்டுக் கொண்டிருந்த நவ்யா நாயர், அதனைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
அதன் பின்னர் மேடையேறி இதற்கு பதிலளித்த நவ்யா நாயர், த்யான், கவலைப்படாதீர்கள். நீங்கள் முதலமைச்சராகும்போது, நான் பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளைப் புடவையும், வைர மாலையும் அணிந்து முதல் வரிசையில் அமர்வேன்.
கண்ணீருடன் உங்களுக்கு ஆதரவாக கோஷமிடுவேன். எனக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி வையுங்கள்" என கூறினார்.
இதன் பின்னர் பேசிய நடிகர் அஜு வர்கீஸ், "இனிமேல் நான் தமிழ்நாட்டிற்குள் நுழையமுடியாது என்று நினைக்கிறேன். மை டியர் சிஎம் சார், என் நண்பண் கொஞ்சம் பைத்தியம் ஆகிவிட்டான். எங்களை மன்னித்துவிடுங்கள்" என நகைச்சுவையாக கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |