நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
கவுண்டமணி
1980 களில் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. செந்தில் உடன் இவர் நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள கவுண்டமணி, தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
மனைவி காலமானார்
கவுண்டமணி 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி சாந்தி, இன்று சென்னையில் காலமாகியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில், அவரது மனைவி சாந்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |