பெற்ற தாயின் திருமணத்துக்கு அவரை மகள்போல கரம்பற்றி அழைத்துச் சென்ற பிரித்தானிய நடிகரின் துயரம்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின்போது அவர்களை தேவாலயத்துக்கு கரம்பற்றி அழைத்துச் செல்வதுபோல, கணவரை இழந்த தன் தாய் வேறொருவரை திருமணம் செய்துகொண்டபோது, அவரை அழைத்துச் சென்ற நடிகர் ஒருவர் தன் தாயை இழந்துவிட்டார்.
பிரித்தானிய நடிகரின் துயரம்
ஆம், பிரான்சில் வாழ்ந்துவந்த ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn Searle, 56)என்னும் பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
அந்த தம்பதியரில், டானின் மகனான கால்லம் கெர் (Callum Kerr, 30) ஒரு பிரித்தானிய நடிகர் ஆவார்.
பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள கால்லம், 2023ஆம் ஆண்டு, தன் தாயான டான், ஆண்ட்ரூவைத் திருமணம் செய்தபோது, அவரை தன் மகள் போல கரம்பற்றி தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார்.
’ஐ லவ் யூ அம்மா, தாயை அவரது திருமணத்துக்கு கரம்பற்றி அழைத்துச் செல்லும் பாக்கியம் யாருக்காவது கிடைக்குமா? மகிழ்ச்சி அம்மா’ என சமூக ஊடகம் ஒன்றில் அப்போது செய்தி ஒன்றை வெளியிட்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார் கால்லம்.
தற்போது, தன் தாய் இறந்த செய்தி கேட்டு, சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார் கால்லம்.
இதற்கிடையில், ஆண்ட்ரூ டான் தம்பதியர் எப்படி உயிரிழந்தார்கள், என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |