தமிழ் திரையுலகில் தொடரும் மரணங்கள்! பிரபல நடிகர் குறைந்த வயதில் உயிரிழப்பு... திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல நடிகரும், இயக்குனர் ராஜு முருகனின் சகோதரருமான குரு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து இறந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமீபகாலமாக நடிகர்கள் பாண்டு, மாறன், நிதீஷ் வீரா, ஜோக்கர் துளசி, கேவி ஆனந்த், தாமிரா போன்றவர்கள் கொரோனா பெறுந்தொற்றுக்கு பலியானார்கள்.
அதே போல நடிகர்கள் விவேக், நெல்லை சிவா,ஐயப்பன் கோபி ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனர் ராஜூ முருகனின் சகோதரருமான குரு ராஜேந்திரன் (44) கொரோனாவால் நேற்று உயிரிழந்தார்.
இவர் கற்றது தமிழ், ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குரு ராஜேந்திரன் 15 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு காலமானார்.
குருவின் மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.