பிரபல KGF நடிகர் புற்றுநோயால் காலமானார்
கேஜிஎப் நடிகர் ஹரிஷ் ராய் காலமாகியுள்ளார்.
ஹரிஷ் ராய்
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான KGF திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில், சாச்சா என்ற வேடத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் ஹரிஷ் ராய்.
மேலும், சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘ஓம்’ திரைப்படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தைராய்டு புற்றுநோய்
55 வயதான ஹரிஷ் ராய் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், ஹரிஷ் ராய்யை நேரில் சந்தித்த கோபி கவுத்ரு அவர் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை இணையத்தில் பகிர்ந்தார்.
ஒரு ஊசிக்கு மட்டுமே ரூ.3.55 லட்சம் செலவாகுவதாகவும், மருத்துவர்கள் 63 நாட்களுக்கு தினமும் 3 ஊசிகள் என பரிந்துரைத்துள்ளனர். இதற்கே ரூ.10.50 லட்சம் தேவைப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ.70 லட்சம் தேவைப்பட்ட நிலையில், தன்னிடம் போதுமான பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், 4 ஆம் கட்ட புற்றுநோய் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹரிஷ் ராய்யின் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |