இந்திய சினிமாவிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்த நடிகர்.., யார் தெரியுமா?
அண்மையில் நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தில் இருந்து தனக்கு கொடுத்த ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்ததாக செய்திகள் வெளியாகின.
விவாகரத்துக்கு பின் கொடுக்கப்படும் ஜீவனாம்ச பணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த வகையில் இந்திய சினிமாவில் ஜீவனாம்சமாக அதிக தொகை கொடுத்த நடிகர் யார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
இந்திய சினிமா துறையில் அதிக தொகையை ஜீவனாம்சம் கொடுத்த நடிகர் என்றால் அது ஹிருத்திக் ரோஷன் கொடுத்தது தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் காதலித்து வந்த பிறகு சூசேன் கானை திருமணம் செய்துகொண்டார் ஹிருத்திக் ரோஷன்.
இவர்களது திருமணம் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
திருமணமான 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிருத்திக் ரோஷன், சூசேன் தம்பதியினர் 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்தின் போது சூசேன் கான் ரூ.400 கோடி ஜீவனாம்சம் கேட்டார். இறுதியில் 380 கோடி ஜீவனாம்சம் தர ஹிருத்திக் ரோஷன் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக தொகை கொடுத்து விவாகரத்து செய்த நடிகர் இவர்தான் என சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |