உயரம் ஒரு தடையல்ல! 1000 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டிய படங்களில் ஜெயிலர் பட ஜாபர்
ரஜினி மற்றும் விக்ரம் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்ற நடிகர் ஜாபர் திரையுலகில் கலக்கி வருகின்றார்.
ஒரு முன்னணி நட்சத்திரமாக இல்லை என்றாலும் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் அதிகமாக வசூலித்துள்ளன.
இந்நிலையில் இவர் பற்றிய ஒரு சில விடயங்களை பார்ப்போம்.
யார் இந்த நடிகர்?
1995இல் பிறந்த ஜாஃபர் சாதிக், தனது 20களின் முற்பகுதியில் நடிப்பதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு ஒரு நடனக் கலைஞராகவும் நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.
இவர் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகவும் பிரபலமானவர். 2020 ஆம் ஆண்டில் வெளியான பாவக்கதைகள் என்ற தொடரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விக்ரம் படத்தில் கவனிக்கப்படக்கூடிய கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இப்படம் ரூ.414 கோடி வசூல் செய்தது.
சாதிக் அதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் ஷைத்தான் வலைத் தொடரில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
2023 இல், ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் ஆகிய படங்களில் துணை வேடங்களில் தோன்றி அதிலும் வெற்றியை அடுத்தடுத்து பெற்றுக்கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்திருந்த படங்கள் எல்லாம் 1000 கோடிகளை எட்டியுள்ளதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
சொத்து மதிப்பு
ஜவான் படம் மொத்தமாக 2100 கோடி வசூல் செய்துள்ளது. இது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்த RRR (1,300), யஷ் நடித்த KGF2 (1,200) மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் (650) படங்களின் வசூலை விட பன்மடங்கு அதிகம்.
ஜவான், ஜெயிலர் மற்றும் விக்ரம் படங்களின் வசூலை மட்டும் மொத்தமாக கணக்கிட்டால் 3,150 கோடி வசூல் ஆகும். இவற்றில் எல்லாம் ஜாஃபர் நடித்துள்ளார்.
இவர் தற்போது இந்தியாவில் உள்ள மிகக் குட்டயைான முக்கிய நடிகர் ஆவார். 4 அடி-8 அங்குலங்கள் மட்டுமே இவரது உயரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்திருப்பதாகவும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நடிகர் பாக்ஸ் ஆபிஸில் தனது ஆதிக்கத்தை மட்டுமே நீட்டியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |