19 வருட காத்திருப்பு! கனவு நினைவானது.. இசையமைப்பாளராக அறிமுகமானது குறித்து நடிகர் ஜெய் உருக்கமான பதிவு
நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமானது குறித்து அவரது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா துறையில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெய். சமீபத்தில் இவர் சுசீந்திரன் இயக்கும் சிவ சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
குற்றமே குற்றம் என்ற படத்திற்கு பிறகு ஜெய் மற்றும் சுசீந்திரன் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார்.
இதுவரை நடிகராக கலக்கி வந்த ஜெய் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மேலும் சிவ சிவா படத்தில் இருந்து ஜெய் இசையில் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனது குறித்து நடிகர் ஜெய் உணர்வுபூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் அக வேண்டும் என்பது எனது 19 வருட கனவு. ஆனால் வாழக்கையில் நடந்த திருப்பத்தினால் நடிகன் ஆகிவிட்டேன்.
#shivashivaa #firstSingle #aJAImusical pic.twitter.com/q5sXuetMjf
— Jai (@Actor_Jai) September 20, 2021
இருப்பினும் எனது கனவை துரத்தி கொண்டு வந்ததால் இந்த இடத்தில் நிற்கிறேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி உங்களின் கனவுகளை கட்டாயமாக நனைவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.