32 வயது நடிகையை 64 வயதில் திருமணம் செய்த நடிகர் ஜிம் கேரி
actor jim carrey married girl friend min Ah: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி, தனது 64 வயதில் 32 வயது நடிகையை 3வது திருமணம் செய்துள்ளார்.
நடிகர் ஜிம் கேரிக்கு 3வது திருமணம்
கனடாவை சேர்ந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி, இவர், தி மாஸ்க் , டம்ப் அண்ட் டம்பர் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

64 வயதான இவருக்கு ஏற்கனேவே இருமுறை திருமணம் நடைபெற்று விவகாரத்தாகியுள்ளது.
1987 ஆம் ஆண்டில் முன்னாள் நடிகை மெலிசா வோமரை திருமணம் செய்தார், இந்த தம்பதி 1995 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.
1996 ஆம் ஆண்டில் தன்னுடன் 'டம்ப அண்ட் டம்பர்' திரைப்படத்தில் நடித்த நடிகை லாரன் ஹோலியை திருமணம் செய்தார், ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த திருமணம் முறிந்தது.
அதன் பின்னர் பல நடிகைகளுடன் உறவில் இருந்த ஜிம் கேரி தற்போது 64 வயதில் தனது 3வது திருமணத்தை செய்துள்ளார்.

தான் நீண்ட நாட்களாக உறவில் இருந்த 32 வயது நடிகையான மின் ஆ என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.
முதன்முதலாக 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
2026 பிப்ரவரியில் பிரான்சில் நடந்த சீசர் விருது விழாவில், கேரி கௌரவ சீசர் விருதைப் பெற்றார்.
அப்போது பேசுகையில், "மின் ஆ எனது உன்னதமான துணைவி, உன்னை நான் நேசிக்கிறேன்" என வெளிப்படையாக தனது உறவை அறிவித்தார்.