மனைவிக்கு தையல் பிரிஞ்சி ரத்தம் கொட்டியது! செத்துட்டேன்.. வடிவேலு பட நடிகரின் கதையை பகிர்ந்து உருகிய நடிகர்

Vadivelu Actors
By Raju Aug 04, 2022 06:50 AM GMT
Report

மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு இன்று பெரியளவில் சாதிக்கும் நடிகர் முத்துக்காளையின் மறுப்பக்கத்தை நடிகர் காதல் சுகுமார் பகிர்ந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் மக்களை சிரிக்க வைத்தவர் முத்துக்காளை. வடிவேலு சினிமாவுக்கு இடைவெளி விடவும் முத்துக்காளை மாதிரியான நடிகர்களும் காணாமல் போனார்கள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களை திருப்பிப் போட்டுள்ளது.

மதுவால் துணை நடிகர்கள் பலர் சீரழிந்த கதையை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. அதேபோல் முத்துக்காளையும் மதுப்பழக்கத்தில் சிக்கியுள்ளார். ஆனால் தற்போது மதுவை விட்டொழித்து புது ஆளாக வலம்வரும் முத்துக்காளையின் கதையை அவர் நண்பரும் நடிகருமான சுகுமார் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில், மேலோட்டமாக பார்க்க முடியாது எங்க நட்பை.. நகைச்சுவை நடிகர்களாக அறியப்பட்ட எங்கள் இருவருக்கும் ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதால் ஒரு நெருக்கமான நட்பு.

நேற்று அண்ணனை ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது.. தீவிரமாக ஓன்லைனில் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார்."எப்பிடிண்ணே இருக்கீங்க?. படிப்பே போதையாயி போய்ட்டு இருக்கு" என்றார்.ஒருகணம் பழைய நினைவுகள் வர பேச்சுக் கொடுத்தேன்..தீவிர குடிப்பிரியராக இருந்தவர் இன்று படிப்பாளியாகி இரண்டு பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.

மனைவிக்கு தையல் பிரிஞ்சி ரத்தம் கொட்டியது! செத்துட்டேன்.. வடிவேலு பட நடிகரின் கதையை பகிர்ந்து உருகிய நடிகர் | Actor Kadhla Sugumaran Shares Muthukalai Actor

குடியை நிறுத்த அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஒரு நொடியில் நிகழ்ந்திருக்கிறது..குடியால் ஒரு படப்பிடிப்புக்கு தாமதமாக செல்ல..வடிவேலு அவர்கள் "எழுதி வச்சிக்கோங்க..முதல்ல குடியால அல்வா வாசு சாவான்.. அடுத்த வருசத்துல முத்துக்காளை செத்துருவான்" எனக் கூற ..அந்த ஒரு வார்த்தை அவரை வருத்தியிருக்கிறது..சொன்னது போலவே அதே வருடம் அல்வா வாசு அண்ணன் இறந்து போக..காளை குடியை நிறுத்த முயற்சித்து இரண்டு முறை தோற்றிருக்கிறார்...

ஒரு கட்டத்தில் Alchohol anonymous center சென்றிருக்கிறார்.. முழுவதுமாக விட்டு ஐந்து வருடங்கள் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையைத் தொடர்கிறார் . 180 நாடுகளில் இருக்கும் அமைப்பு இது. வருத்தமளிக்கும் செய்தி என்னவெனில் நிறையத் திரைப் பிரபலங்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களில் சிலரால் நிறுத்த சிரமப்படுகிறார்கள். சினிமாவில் தடுக்கி விழுந்தால் தண்ணிமேல்தான் விழவேண்டும். எல்லாவற்றுக்கும் குடிப்பார்கள்.எனக்கும் அந்தப் பழக்கம் தொட்டுச் சென்றிருக்கிறது...! அங்கே 20 வயதினர்கள் அதிகமாக வருகிறார்கள் எனக் கூற அதிர்ந்தேன் என்னண்ணே ..

மனைவிக்கு தையல் பிரிஞ்சி ரத்தம் கொட்டியது! செத்துட்டேன்.. வடிவேலு பட நடிகரின் கதையை பகிர்ந்து உருகிய நடிகர் | Actor Kadhla Sugumaran Shares Muthukalai Actor

ஆமா அவங்கள்ளாம் ஆறு ஏழு வயதில் பான்பராக், குட்கா என ஆரம்பித்து இப்போது போதையின் பாதையில் இருந்து மீள வருகிறார்கள்..25 வருடங்களாக ஒருவர் வருகிறார்.. குடி அடிமையாக இருந்த அவர் சொன்னது. கையில காசு இல்ல கைக்குழந்தை கையில ஒண்ணை என்கிட்ட விட்டுட்டு என் மனைவி கவுர்மென்ட் ஆஸ்பிட்டல்ல அவளா போயி பிரசவத்துக்கு அட்மிட் ஆயிட்டா.. அக்கம் பக்கத்துல கிடைச்ச கொஞ்ச காசை கொண்டு போயி குடிச்சிட்டு அங்கயே படுத்துட்டேன் வீட்ல குழந்தை பசியில அழ பக்கத்துல இருந்தவங்க ரெண்டு நா கழிச்சி எனை எழுப்பி ஆஸ்பிட்டல் கூட்டிப்போயிப் பார்த்தா பொண்டாட்டி குழந்த பெத்துப் படுத்திருந்தா மேக்கொண்டு வைத்தியம் பாக்க காசில்ல பஸ்ஸுல கூட்டிட்டு வீட்டுக்கு வரேன் மனைவி உக்காந்த இடத்துல ரத்தம் கொட்டுது என்னடின்னு கேட்டா.. விரக்தியா என்னை ஒரு பார்வை பார்த்தவ.

வயித்த தொட்டுப் பார்த்துட்டு, "ஆப்பரேசன் பண்ணின இடத்துல தையல் பிரிஞ்சி அந்த நூலு வழியா ரத்தம் வழியுது" என்றாள். நான் அப்பவே செத்துட்டேன்.. அப்போ விட்டதுதான். இங்க வந்துட்ருக்கேன் என்றார்.

நான் வெடவெடத்துப் போனேன். நண்பர்களே இது இல்லாம இருக்க முடில அப்டீங்கிறவங்க இப்பவே கொஞ்சம் கொஞ்சமா விட்ருங்க.. இல்லன்னா இந்த சென்டருக்குப் போங்க ஒருபா செலவில்லாம மீளமுடியும். அதுக்கு சாட்சி இதோ எங்க முத்துக்காளை அண்ணன். அவரையும் தொடர்பு கொள்ளலாம். எல்லா ஊர்களிலும் நடத்துகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவிக்கு தையல் பிரிஞ்சி ரத்தம் கொட்டியது! செத்துட்டேன்.. வடிவேலு பட நடிகரின் கதையை பகிர்ந்து உருகிய நடிகர் | Actor Kadhla Sugumaran Shares Muthukalai Actor

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US