நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காப் பயணம் முடித்து திரும்பிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஐரோப்பா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கொரோனா பரவல் நீடித்துவரும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவுக்கு பலர் பதில் பதிவிட்டு வருவதுடன், விரைவில் நலம்பெற அவரது நலம்விரும்பிகளும் ஆதரவாளர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.