ஹாலிவுட் படத்தின் காப்பியா கமலின் ''தக் லைப்'' படம்? உருவான சர்ச்சை
நடிகர் கமல்ஹாசனின் ''தக் லைப்'' படம் அறிவிப்பு நேற்று வெளியானது. வந்த நாளிலேயே மற்றொரு படத்தின் காபி என்ற சிக்கலை சந்தித்துள்ளது.
கமலின் ''தக் லைப்'' படம்
நடிகர் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ''இந்தியன்2'' மற்றும் ''KH 234'' ஆகிய படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் குடுத்து வருகின்றனர்.
அதில் நேற்று நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்தின் KH 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவித்தனர். இதன் அறிமுக டீசரும் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் முதற்கொண்டு பல விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக டீசரில், கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகமாகிறார். சாதிப்பெயரை சொல்கிறார் கமல்ஹாசன் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
Rise of skywalker Thuglife (2024)
— кαι ρυℓℓα (@KPM_Offi) November 6, 2023
(2019) pic.twitter.com/kQB20aDgJO
மேலும், ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘Rise of the Sky Walker’ என்ற ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சிகளைப் போலவே, இதன் அறிமுக டீசரும் அமைந்திருப்பதால் அந்தப் படத்தின் காப்பியா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |