பிரபல நடிகை கரீனா கபூருக்கு கொரோனா! எப்படி பரவியது? எச்சரிக்கை தகவல்
பிரபல திரைப்பட நடிகையான கரீனா தனக்கு கொரோனா எப்படி வந்திருக்கும் என்பது குறித்து கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில், அடிக்கடி திரைப்பிரபலங்களிடையே பார்ட்டி நடப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் நடிகை கரீனாகபூர் அம்ரிதா அரோரா உள்ளிட்டோர், இயக்குனர் கரண் ஜோகர் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கரீனா மற்றும் அம்ரிதா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கரீனா கூறுகையில், தனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் தொற்று கண்டறிந்ததும் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு உரிய சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
என் குடும்பத்தில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுள்ளனர் தற்சமயம் அவர்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லை. சீக்கிரம் இதிலிருந்து மீண்டும் வருவேன் என கூறியுள்ளார்.
இரண்டு தடுப்பூசி போட்டிருந்தும், கரீனாவுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், நடிகை கரீனா கலந்து கொண்ட பார்ட்டியில் பங்கேற்ற மேலும் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களின் விபரங்களை மும்பை சுகாதாரத்துறையினர் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனாவில் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வைரஸும் பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் போது, மக்கள் மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செல்லும் படி எச்சரிக்கப்படுகிறது.