நடிகர் கார்த்தியின் மகளா இது? எப்படி வளர்ந்திட்டாங்கனு பாருங்க... வைரல் புகைப்படம்
நடிகர் கார்த்தியின் குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் அவரது மகள் உமையாள் சற்று வளர்ந்துள்ளதைக் கண்டு கார்த்திக்கின் மகளா என்று கேட்டு வருகின்றனர்.
நடிகர் கார்த்தி
தந்தை சிவக்குமார், அண்ணன் சூர்யா என தனது குடும்பத்தில் சினிமா பிரபலங்களாக வலம்வரும் குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகர் கார்த்தி. இவரும் சினிமாவில் உள்ள ஆர்வத்தினால் எண்ட்ரியான கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.
கடுமையான உழைப்பால் பல படங்களில் நடித்து வெற்றியை தூக்கிய இவர், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
விக்ரம், ஜெயம் ரவி, போன்ற நடிகர்களை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு இந்தப்படத்தில் இவரது நடிப்பு காணப்பட்டது. என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தான் வருகின்றார்.
கிராமத்து வாழ்க்கை என்றால் அவ்வளவு பிரியம் கொண்ட இவர் நேரம் கிடைக்கும் போது தனது கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றார் அதே போன்று அங்கு திருவிழா என்றாலும் குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டு வருகின்றார்.
மகளுடன் முளைப்பாரி எடுத்த கார்த்தி
தற்போது தனது சொந்த ஊருக்கு சென்ற கார்த்தி அங்கு திருவிழாவில் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் அவருடன் மகள் உமையாளரும் முளைப்பாரி எடுத்துள்ளார்.
குழந்தையாக பார்க்கப்பட்ட உமையாள் தற்போது வளர்ந்து செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், கார்த்தியின் மகள் உமையாளா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |