தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும், ஆனால்.. நடிகர் கார்த்திக் கூறிய விடயம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் தொடர்ச்சியாக நடிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
சமீபத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் தனது கட்சியினை அறிவித்த நடிகர் விஜய், அதற்கான பிரத்யேக செயலியையும் பின்னர் அறிமுகப்படுத்தினார்.
தமது கட்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புவோர் அந்த செயலி மூலம் இணையலாம் என அவர் கூறியதும் லட்சக்கணக்கானவர் செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
விஜய்யின் அரசியல் வருகையை பலரும் வரவேற்றாலும், அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
கார்த்திக்
இந்த நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்கிடம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், 'தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்..நன்றாக வரட்டும். அவர் சரியான வயதில் வருகிறார். இது ஆரோக்கிமான விடயம். Peakயில் இருக்கும்போதே வருகிறார் என்றால் அது ரொம்ப பெரிய விடயம். ஒரு அண்ணனா என்னோட ஆசை அவர் அதுவரை நடிக்கணும். ஏனென்றால் அது தேவைப்படும். சில விடயங்கள் திரையில் சொல்லும்போது இன்னும் ரீச் ஆகும்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |