நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் நடந்த விபரீதம்
பிரபல திரைப்பட நடிகரான கார்த்திக் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களில் கார்த்திக்கும் ஒருவர், தற்போது கவுரவ வேடங்களில் நடித்து வரும் கார்த்திக், அவரது மகன் கெளதம் கார்த்திக்கை, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்திக், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், தற்போது கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், கார்த்திக்கிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.