30 வருட தோழியை கரம்பிடித்தார் கவின்! வெளியான திருமண புகைப்படங்கள்
பிரபல தமிழ் நடிகரான கவின் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவி யில் சரவணன் மீனாட்சியில் நடித்தபோதே கவினுக்கு ஏராளமான இளம்பெண்கள் ரசிகர்களாக மாறினார்கள்.
அதன்பின் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்த கவின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.
அதனை தொடர்ந்து லிப்ட் படத்தில் நடித்தார். தற்போது வெளியான டாடா படத்தின் வெற்றி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில், பள்ளியில் பணியாற்றி வரும் தனது காதலியான மோனிகாவுடன் ஆகஸ்ட் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், திருமணம் இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது.
மேலும் கூடியசீக்கரமே கவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கவினுக்கு கல்யாணம் ஆனது தெரிய வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கவினுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |